Sunday, May 28, 2023
HomeAstrologyராசிபலன் (2/3/2023): யாருக்கெல்லாம் இன்று அலைச்சல்..? யாருக்கெல்லாம் இன்று வசதி..? ராசிபலன் சொல்வது என்ன?

ராசிபலன் (2/3/2023): யாருக்கெல்லாம் இன்று அலைச்சல்..? யாருக்கெல்லாம் இன்று வசதி..? ராசிபலன் சொல்வது என்ன?

மேஷம்

சுபகாரியங்களை முன் நின்று செய்வீர்கள். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வேலையாட்களால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். உத்தியோகத்தில் இருந்துவந்த நெருக்கடியான சூழ்நிலைகள் மறையும். பக்தி நிறைந்த நாள்.

ரிஷபம்

பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த இழுபறிகள் விலகும். உறவினர்களை பற்றிய புரிதல் உண்டாகும். சிறு தூர பயணங்களால் மனதில் மாற்றங்கள் ஏற்படும். பணி நிமிர்த்தமான சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். போட்டிகள் நிறைந்த நாள்.

மிதுனம்

நினைத்த பணிகள் அலைச்சலுக்கு பின்பு நிறைவேறும். எதிர்பாராத சில நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். வாடிக்கையாளர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். உயர் அதிகாரிகளிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். நன்மை நிறைந்த நாள்.

கடகம்

மனதில் தன்னம்பிக்கை மேம்படும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும். மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். உத்தியோக பணிகளில் மதிப்புகள் அதிகரிக்கும். நிம்மதி நிறைந்த நாள்.

சிம்மம்

உடனிருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும். உடலில் ஒருவிதமான அசதிகள் ஏற்பட்டு நீங்கும். செயல்பாடுகளில் ஆர்வமின்மை உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்ளவும். ஆதரவு நிறைந்த நாள்.

கன்னி

பொது காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். உறவினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் புதுவிதமான அனுபவம் ஏற்படும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். உத்தியோக பணிகளில் திடீர் இடமாற்றங்கள் நேரிடும். வியாபாரத்தில் ஏற்பட்ட சில மாற்றங்களின் மூலம் மேன்மை உண்டாகும். வரவுகள் நிறைந்த நாள்.

துலாம்

புதிய நண்பர்களால் உற்சாகம் ஏற்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். சோதனைகள் விலகும் நாள்.

விருச்சிகம்

எதிர்மறை கருத்துக்களை குறைத்து கொள்ளவும். எடுத்து செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் இழுபறிகள் ஏற்படும். வியாபாரத்தில் மந்தமான சூழல் அமையும். உத்தியோக பணிகளில் விழிப்புணர்வுடன் இருக்கவும்.

தனுசு

மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்பாலின மக்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரம் நிமிர்த்தமான உதவிகள் சாதகமாக அமையும். பணி நிமிர்த்தமான முயற்சிகள் கைகூடும். ஓய்வு நிறைந்த நாள்.

மகரம்

திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.. சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். குழந்தைகளின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். தடைகள் விலகும் நாள்.

கும்பம்

உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மனதில் நினைத்த பணிகளை செயல் வடிவில் மாற்றுவீர்கள். உத்தியோக பணியில் திருப்தியான சூழல் ஏற்படும். முயற்சிகள் ஈடேறும் நாள்.

மீனம்

வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு ஆதரவு மேம்படும். பழைய கடனை அடைப்பீர்கள். உத்தியோகத்தில் இருந்துவந்த எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். கவலைகள் குறையும் நாள்.