மேஷம்
ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டு சேமிப்பை மேம்படுத்துவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மிக எண்ணங்களில் நிபுணத்துவம் வெளிப்படும். உத்தியோகத்தில் நெருக்கடியான சூழ்நிலைகள் இருந்தாலும் ஒத்துழைப்பு ஏற்படும். பாராட்டுகள் கிடைக்கும் நாள்.
ரிஷபம்
குடும்ப உறுப்பினர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். வங்கி பணிகளில் விவேகம் வேண்டும். இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். அனுபவங்களால் எதையும் சமாளிக்கக்கூடிய பக்குவம் ஏற்படும். நண்பர்களின் சந்திப்பு மாற்றத்தை உருவாக்கும். மேன்மை நிறைந்த நாள்.
மிதுனம்
ஆடம்பரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உபரி வருமானம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். செய்கின்ற செயல்பாடுகளில் சுதந்திரம் அதிகரிக்கும். வியாபாரத்தில் வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். விரயம் நிறைந்த நாள்.
கடகம்
நிதானமான பேச்சுக்கள் உங்கள் மீதான நன்மதிப்பை மேம்படுத்தும். வியாபாரத்தில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் குறையும். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். தொல்லைகள் குறையும் நாள்.
சிம்மம்
உடல் ஆரோக்கியம் மேம்படும். புதுவிதமான செயல்பாடுகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். வெளிவட்டார நண்பர்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.
ALSO READ | அடேங்கப்பா..! மண்பானையில் சமைத்து சாப்பிட்டால் இவ்ளோ நன்மைகளா..?
கன்னி
சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். கல்வி சார்ந்த பணிகளில் ஆர்வமின்மை ஏற்படும். வியாபார ரீதியான பணிகளில் அனுசரித்து செல்வதன் மூலம் மேன்மை ஏற்படும். புதிய நபர்களால் அனுபவம் உண்டாகும். அன்பு நிறைந்த நாள்.
துலாம்
கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்லவும். வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் விவேகம் வேண்டும். மற்றவர்கள் பணிகளில் தலையிடுவதை தவிர்க்கவும். வேலையில் எதிர்பாராத சில மாற்றங்கள் ஏற்படும். போட்டிகள் நிறைந்த நாள்.
விருச்சிகம்
உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் குறையும். மனை சார்ந்த பணிகளில் லாபம் உண்டாகும். உணவு சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இழுபறியான வரவுகள் கிடைக்கும். தெளிவு நிறைந்த நாள்.
தனுசு
புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். விவசாய பணிகளில் உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் சில மாற்றங்களை செய்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பத்திரம் தொடர்பான துறைகளில் ஆதாயம் ஏற்படும். சிக்கல்கள் குறையும் நாள்.
மகரம்
நண்பர்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். புதிய கலைகளை கற்பதில் ஆர்வம் உண்டாகும். தனவரவுகளால் மேன்மை ஏற்படும். கணிதம் சார்ந்த துறைகளில் வாய்ப்புகள் மேம்படும். வெற்றி நிறைந்த நாள்.
கும்பம்
நெருக்கடியான சூழ்நிலைகள் மறையும். வீட்டின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். குழந்தைகள் ஆதரவாக இருப்பார்கள். ஆன்மிகம் சார்ந்த பணிகளில் ஈடுபாடு உண்டாகும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். இன்னல்கள் குறையும் நாள்.
மீனம்
பெற்றோர்களிடம் மனம் விட்டு பேசுவீர்கள். கலை சார்ந்த துறைகளில் ஈடுபாடு அதிகரிக்கும். உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். இணையம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மதிப்பு மேம்படும் நாள்.