Thursday, June 1, 2023
HomeAstrologyஇன்னைக்கு சண்டே… ஜாலியா இருக்கப்போற ராசிக்காரர்கள் யார்? யார்?

இன்னைக்கு சண்டே… ஜாலியா இருக்கப்போற ராசிக்காரர்கள் யார்? யார்?

இ‌ன்றைய ராசிபலன் (26/3/2023):
இந்த நாள் எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே காணலாம்.

மேஷம்

சிந்தனைகள் அதிகரிக்கும். நினைத்ததை நிறைவேற்றி கொள்வீர்கள். குடும்ப சூழ்நிலைகளை அறிந்து செயல்படுவீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பயணங்களின் மூலம் புத்துணர்ச்சி உண்டாகும். இன்னல்கள் குறையும் நாள்.

ரிஷபம்

குழப்பம் குறையும். ரகசியங்கள் பகிர்வதை தவிர்க்கவும். உடன்பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். ஆரோக்கிய சிந்தனைகள் மேம்படும். வெளியூர் பணி நிமிர்த்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். உடனிருப்பவர்களால் மாறுபட்ட அனுபவம் உண்டாகும். மேன்மை நிறைந்த நாள்.

மிதுனம்

புரிதல் உண்டாகும். தாய்மாமன் வழியில் ஆதரவான சூழல் அமையும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். நெருக்கடிகள் உண்டாகும். வியாபார பணிகளில் கவனம் வேண்டும். உணர்ச்சிவசப்படாமல் சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படவும். பிறமொழி பேசும் மக்கள் ஆதரவாக இருப்பார்கள். திறமை வெளிப்படும் நாள்.

கடகம்

மனப்பக்குவம் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கைகூடும். முன்னேற்றம் ஏற்படும். இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். கலை சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு ஏற்படும். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். கவனம் வேண்டிய நாள்.

சிம்மம்

புரிதல் அதிகரிக்கும். கலந்தாலோசித்து முடிவு எடுப்பது நல்லது. அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். சமூகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். செயல்பாடுகளில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். மருத்துவ பணிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். சோர்வு குறையும் நாள்.

கன்னி

அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளின் மூலம் மாற்றம் உண்டாகும். புதுவிதமான அனுபவம் கிடைக்கும். வெளிநாடு குடியுரிமை கிடைப்பதில் இருந்த தடைகள் விலகும். கடன் நிமிர்த்தமான ஆலோசனைகள் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். புத்திரர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சுபிட்சம் உண்டாகும் நாள்.

துலாம்

கணவன், மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். எண்ணிய சில பணிகள் நிறைவுபெறுவதில் தாமதம் உண்டாகும். மாணவர்களுக்கு ஞாபக மறதி அவ்வப்போது தோன்றி மறையும். எதிர்பாராத சில செய்திகளின் மூலம் விரயங்கள் உண்டாகும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். பயனற்ற விவாதங்களை குறைத்து கொள்ளவும். விவேகம் வேண்டிய நாள்.

விருச்சிகம்

காணாமற்போன முக்கிய ஆவணங்கள் மீண்டும் கிடைக்கும். மாணவர்கள் தனித்திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். நண்பர்களின் மூலம் சாதகமான உதவிகள் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஈடேறும். விவாதங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். கூட்டு வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.

தனுசு

புரிதல் உண்டாகும். தந்தை வழியில் ஒத்துழைப்பான சூழல் அமையும். அனைவரிடத்திலும் அனுசரித்து செல்வதன் மூலம் மன அமைதி ஏற்படும். எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். உத்தியோக பணிகளில் திருப்திகரமான சூழ்நிலைகள் ஏற்படும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். பொறுமை வேண்டிய நாள்.

மகரம்

ஆர்வம் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் கிடைக்கும். புதுவிதமான வாய்ப்புகள் ஏற்படும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் அவ்வப்போது தடுமாற்றம் ஏற்படும். பணிகளில் உள்ள சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். சோர்வு விலகும் நாள்.

கும்பம்

ஒத்துழைப்பு மேம்படும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் உண்டாகும். விவசாயம் சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். முன்யோசனையின்றி செயல்படுவதை குறைத்து கொள்ளவும். உடலில் இருந்துவந்த சோர்வு குறையும். வருமானத்தை மேம்படுத்த முயல்வீர்கள். ஆக்கப்பூர்வமான நாள்.

மீனம்

ஆர்வம் அதிகரிக்கும். இழுபறியான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பிள்ளைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். வேலையாட்களால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். உத்தியோக பணிகளில் மேன்மை உண்டாகும். இன்பம் நிறைந்த நாள்.

ALSO READ | மாங்கல்ய பலம், ஆயுள் வலிமை தரும் சந்திர தரிசனம்..! எப்படி வணங்குவது?