Monday, May 29, 2023
HomeAstrologyஇன்றைய ராசிபலன் (26/1/2023): ரிஷபத்திற்கு வாய்ப்பு.. மிதுனத்திற்கு வெற்றி.. அப்போ உங்களுக்கு இந்த நாள் எப்படி?

இன்றைய ராசிபலன் (26/1/2023): ரிஷபத்திற்கு வாய்ப்பு.. மிதுனத்திற்கு வெற்றி.. அப்போ உங்களுக்கு இந்த நாள் எப்படி?

மேஷம்

தொழில் சார்ந்த பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். உலக நிகழ்வுகளின் மூலம் மாற்றம் உண்டாகும். பிறமொழி பேசும் மக்களிடம் கவனத்துடன் செயல்படவும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

ரிஷபம்

நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். உத்தியோக பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மருத்துவம் சார்ந்த துறைகளில் லாபகரமான வாய்ப்புகள் கிடைக்கும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பாராட்டுகள் நிறைந்த நாள்.

மிதுனம்

செய்கின்ற முயற்சிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். குழந்தைகளின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். கமிஷன் சார்ந்த பணிகளில் லாபம் ஏற்படும். இன்சூரன்ஸ் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு உயர்வு உண்டாகும். வித்தியாசமான செயல்பாடுகளின் மூலம் முன்னேற்றத்தை ஏற்படுத்துவீர்கள். மதிப்பு நிறைந்த நாள்.

கடகம்

நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். பழைய நினைவுகளின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தவறிப்போன சில பொருட்கள் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். இன்பம் நிறைந்த நாள்.

சிம்மம்

உங்களின் சந்தேக உணர்வுகளை குறைத்துக் கொள்ளவும். எதிலும் பதற்றமின்றி செயல்படவும். கருத்துக்களை வெளிப்படுத்தும் போது சூழ்நிலையை அறிந்து செயல்படவும். கடன் சார்ந்த விஷயங்களால் சில வருத்தங்கள் நேரிடும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. வாகன பயணங்களில் நிதானத்தை கடைபிடிக்கவும். பொறுமை வேண்டிய நாள்.

கன்னி

கடன் சார்ந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். சகோதரர் வகையில் ஒத்துழைப்பு ஏற்படும். சவாலான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்துக்களில் சில மாற்றங்களை செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரம் சார்ந்த தொழிலில் கூட்டாளிகளின் ஆதரவின் மூலம் முதலீடு அதிகரிக்கும். ஆக்கப்பூர்வமான நாள்.

துலாம்

மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சிந்தனைத் திறனில் மாற்றம் உண்டாகும். கால்நடை சார்ந்த பணிகளில் லாபம் ஏற்படும். கடன் தொடர்பான சில உதவிகள் கிடைக்கும். நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். குழந்தைகளின் படிப்பில் முன்னேற்றமான தருணங்கள் ஏற்படும். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு உண்டாகும். ஆதாயம் நிறைந்த நாள்.

விருச்சிகம்

குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். மனதிற்கு பிடித்த விதத்தில் வீட்டில் சில மாற்றங்களைச் செய்வீர்கள். மனதில் புதுவிதமான ஆசைகளும், எண்ணங்களும் உண்டாகும். கலை சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். கீர்த்தி நிறைந்த நாள்.

தனுசு

உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்களின் மூலம் அமைதியின்மை உண்டாகும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். அரசு சார்ந்த செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வெற்றி நிறைந்த நாள்.

மகரம்

உத்தியோக ரீதியான பணிகளில் திறமைக்கு ஏற்ப உயர்வு உண்டாகும். பாகப்பிரிவினை தொடர்பான முயற்சிகள் கைகூடும். வியாபார பணிகளில் வேலையாட்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். மனதை உறுத்திவந்த சில விஷயங்களுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். நண்பர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. உதவி நிறைந்த நாள்.

கும்பம்

விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். தேவையற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனைகள் மேம்படும். சுபகாரியம் தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சல்களும், காலதாமதமும் உண்டாகும். வியாபாரம் சார்ந்த பணிகளில் போட்டிகள் குறையும். விவேகம் வேண்டிய நாள்.

மீனம்

குழப்பமான சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் காலதாமதம் ஏற்படும். பிடிவாத குணத்தினை குறைத்துக் கொள்ளவும். வேலையாட்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்பட்டு நீங்கும். தனவரவை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பூர்வீக சொத்துக்களில் அலைச்சல்கள் உண்டாகும். வாழ்வு நிறைந்த நாள்