மேஷம்
இன்றைய நாள் லாபம் அதிகரிக்கும். துடிப்புடன் செயல்படுவீர்கள். வீட்டில் கலகலப்பான சூழல் உருவாகும். மகிழ்ச்சியான நாள் ஆகும்.
ரிஷபம்
இந்த நாள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள். அக்கம்பக்கத்தினரிடம் மிகுந்த கவனம் தேவை. வாகனங்களில் செல்லும்போது கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற விவகாரத்தில் தலையிட வேண்டாம்.
மிதுனம்
இந்த நாள் மிகவும் பொறுமையுடன் செயல்பட வேண்டும். அனுபவங்கள் நிறைந்த நாளாக இருக்கும். சகோதர வழியில் நன்மைகள் உண்டாகும். தொலைபேசி வழித்தகவல்களால் ஆறுதல் கிடைக்கும்.
கடகம்
காப்பீடு சார்ந்த துறைகளில் லாபம் மேம்படும். சமூக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் மேம்பாடு அடையும். நிம்மதி அதிகரிக்கும்.
சிம்மம்
இந்த நாள் புதியதாக எதையாவது கற்றுக்கொள்வீர்கள். தொழில்நுட்பம் சார்ந்த இணையம் சார்ந்த ஆர்வம் உண்டாகும். மாணவர்களுக்கு படிப்பில் நல்ல பாராட்டுகள் கிடைக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.
கன்னி
வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உயர் அதிகாரிகளை பற்றிய புரிதல் மேம்படும். கலை, இலக்கிய துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
துலாம்
இந்த நாள் மிகவும் அனுசரித்து நடக்க வேண்டும். உயரதிகாரிகளிடம் தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது. அமைதியுடனும், கவனத்துடனும் செயல்பட வேண்டும். சிவபெருமானை வணங்கினால் நன்மை கிட்டும்.
விருச்சிகம்
வெளியூர் பயண வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வாகன யோகம் உண்டாகும். திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை நடக்கும். மனதில் திடமான நம்பிக்கை பிறக்கும்.
தனுசு
நீண்ட நாள் நடைபெற்று வந்த வழக்கு உங்களுக்கு சாதகமாக இருக்கும். கவலைகள் அகன்று மகிழ்ச்சி பிறக்கும். வீட்டில் மங்கல ஓசை கேட்கும். சுபகாரியங்கள் கைகூடும்.
மகரம்
மனதை உறுத்திய பிரச்சனைகள் குறையும். வருமானம் அதிகரிப்பதற்கான வழி பிறக்கும். ஆலயம் செல்லும் யோகம் கிட்டும். எதிர்பாராத பண வரவு உண்டாகும்.
கும்பம்
புத்துணர்ச்சியான சிந்தனைகளின் மூலம் மாற்றத்தை உருவாக்குவீர்கள். இன்னல்கள் குறையும் நாள். கலை பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் தவறிய பொறுப்புகள் மீண்டும் கிடைக்கும்
மீனம்
வீடுகளிலும், பணிபுரியும் இடங்களிலும் புதிய முயற்சிகளுக்கு வெற்றிகள் கிட்டும். மனைவிமார்களுக்கு கணவன்மார்களின் ஒத்துழைப்பு முழு அளவில் கிடைக்கும். பெருமைகள் வந்து சேரும் அமோகமான நாள்.