Wednesday, May 24, 2023
HomeAstrologyஇ‌ன்றைய ராசிபலன் (25/3/2023): விருச்சிகத்திற்கு தெளிவு… தனுசுக்கு குழப்பம்..! அப்போ நம்ம ராசிக்கு இன்னைக்கு என்ன?

இ‌ன்றைய ராசிபலன் (25/3/2023): விருச்சிகத்திற்கு தெளிவு… தனுசுக்கு குழப்பம்..! அப்போ நம்ம ராசிக்கு இன்னைக்கு என்ன?

இ‌ன்றைய ராசிபலன் (25/3/2023): இன்று எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே காணலாம்.

மேஷம்

சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். புரிதல் உண்டாகும். குணநலன்களில் மாற்றங்கள் ஏற்படும். தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனைகள் மேம்படும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படவும். குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். புரிதல் நிறைந்த நாள்.

ரிஷபம்

கட்டுப்பாடுகள் விலகும். புதிய அனுபவம் உண்டாகும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். மனதில் பல சிந்தனைகள் உண்டாகும். உலகம் பற்றி புது கண்ணோட்டம் ஏற்படும். பயணங்களில் வேகம் வேண்டாம். வரவுகள் நிறைந்த நாள்.

மிதுனம்

புது இலக்குகள் பிறக்கும். இணைய ஆர்வம் அதிகரிக்கும். உயர்கல்வியில் தெளிவு பிறக்கும். கலைத் திறமைகள் வெளிப்படும். சேமிப்பு சிந்தனைகள் மேம்படும். பணிகளில் புதுவிதமான சூழல் உண்டாகும். பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். செல்வாக்கு நிறைந்த நாள்.

கடகம்

பதவி உயர்வு அமையும். பொறுப்புகள் அதிகரிக்கும். அரசு சார்ந்த பணிகளில் உள்ள நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். லாபம் மேம்படும். ஆர்வம் அதிகரிக்கும். அலைச்சல்கள் உண்டாகும். உங்களின் கருத்துக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். இன்பம் நிறைந்த நாள்.

சிம்மம்

வியாபாரத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். ஆன்மீக ஈடுபாடு ஏற்படும். வெளிவட்டாரங்களில் புது அனுபவம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். உதவிகள் கிடைக்கும் நாள்.

கன்னி

குடும்ப உறுப்பினர்களால் அலைச்சல்கள் ஏற்படும். மற்றவர்களை எதிர்பார்த்து இருக்காமல் நீங்களே செய்வது நல்லது. வியாபாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். செயல்பாடுகளில் மாற்றங்கள் உண்டாகும் உறவினர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். பொறுமை வேண்டிய நாள்.

துலாம்

தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். பலரின் நம்பிக்கைகளை பெறுவீர்கள். புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். தடைபட்ட வரவுகள் கிடைக்கும். பழக்கவழக்கத்தின் மூலம் ஆதாயத்தை உருவாக்கி கொள்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். எதிர்ப்புகள் படிப்படியாக குறையும். பக்தி நிறைந்த நாள்.

விருச்சிகம்

பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் ஏற்படும். கடன் சார்ந்த விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பொருளாதார சிக்கல்கள் குறையும். ஒத்துழைப்பு மேம்படும். பிரச்சனைகளுக்கு தெளிவு பிறக்கும். எதிர்பாராத திடீர் வாய்ப்புகளின் மூலம் புதுமையான சூழல் அமையும். சுகம் நிறைந்த நாள்.

தனுசு

குழப்பம் ஏற்பட்டு நீங்கும். தாய்மாமன் வழியில் அனுசரித்து செல்லவும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். ரசனையில் புதுவிதமான மாற்றங்கள் ஏற்படும். கலைகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். பாராட்டுகள் நிறைந்த நாள்.

மகரம்

உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் இடமாற்றங்கள் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். அரசு தொடர்பான பணிகளில் அனுகூலம் ஏற்படும். கால்நடை வியாபாரத்தில் மேன்மையான சூழ்நிலைகள் அமையும். எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். பழைய நினைவுகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். மாற்றங்கள் உண்டாகும் நாள்.

கும்பம்

உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். செயல்பாடுகளில் திருப்தியான சூழல் அமையும். கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும். ஆதரவு கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். விடாப்பிடியாக சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். வெற்றி நிறைந்த நாள்.

மீனம்

குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கப் பெறுவீர்கள். புதிய நபர்களால் மாற்றங்கள் பிறக்கும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். திறமைகள் வெளிப்படும் நாள்.

ALSO READ | ராமனே பூஜித்த சிவன்.. 16 பேறுகளையும் அள்ளித்திரும் தெலங்கானா ராமலிங்கேஸ்வரர் திருக்கோயில்..!