இன்றைய ராசிபலன் (23/3/2023):இந்த நாள் எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே காணலாம்.
மேஷம்
தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். சுதந்திரமாக செயல்படுவீர்கள். எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். வேள்வி தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். தனவரவுகள் கிடைக்கும். வாக்கு சாதுரியத்தின் மூலம் தடைபட்ட சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
ரிஷபம்
சிந்தனைகள் அதிகரிக்கும். சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். வியாபார பணிகளில் முதலீடுகள் மேம்படும். சில நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பேச்சுவார்த்தைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நன்மை நிறைந்த நாள்.
மிதுனம்
பயணங்கள் கைகூடும். பேராசையின்றி செயல்படுவது நன்மையை ஏற்படுத்தும். குடும்பத்தில் பொறுப்புகள் மேம்படும். அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். ம் செல்வாக்கு மேம்படும். அரசு தொடர்பான பணிகளில் ஆதாயம் ஏற்படும். வேளாண்மை சார்ந்த பணிகளில் ஆலோசனைகளை பெறுவதன் மூலம் தெளிவு பிறக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
கடகம்
புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வேள்வி பணிகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் துரிதம் ஏற்படும். புதிய அனுபவம் உண்டாகும். நிர்வாகம் சார்ந்த பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவருடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். ஆதாயம் நிறைந்த நாள்.
சிம்மம்
கவனம் வேண்டும். பொருட்சேர்க்கை உண்டாகும். சுபகாரியம் தொடர்பான அலைச்சல்கள் மேம்படும். சிந்தித்து செயல்படவும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவுடன் செயல்படவும். உணவு சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். வெளிவட்டாரங்களில் பொறுமையை கடைபிடிக்கவும். அனுபவம் மேம்படும் நாள்
கன்னி
வெளிப்படையான குணநலத்தின் மூலம் பலரின் நம்பிக்கைகளை பெறுவீர்கள். புதிய இடங்களுக்கு சென்று வருவீர்கள். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். தவறிப்போன பொருட்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவால் நன்மை ஏற்படும். காரிய அனுகூலம் உண்டாகும். செல்வாக்கு மேம்படும் நாள்.
துலாம்
ஆதரவான சூழல் அமையும். புதிய வேலை நிமிர்த்தமான செயல்பாடுகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். உத்தியோகம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். தந்தைக்கு உத்தியோக உயர்வு கிடைக்கும். கால்நடைகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். புரிதல் உண்டாகும். கவலைகள் விலகும் நாள்.
விருச்சிகம்
விவேகத்துடன் செயல்படுவது நல்லது. சேமிப்பை மேம்படுத்துவீர்கள். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பொழுதுபோக்கு செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். அலைச்சல்கள் இருந்தாலும் ஆதாயம் உண்டாகும். சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். நலம் நிறைந்த நாள்.
தனுசு
மனம் விட்டு பேசுவதன் மூலம் புரிதல் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய தெளிவினை ஏற்படுத்தும். ஆர்வமின்மை குறையும். சமூக பணி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். சாதகமான முடிவு கிடைக்கும். அரசு தொடர்பான செயல்களில் அனுகூலம் ஏற்படும். நட்பு நிறைந்த நாள்.
மகரம்
தடைகளை வெற்றி கொள்வீர்கள். ஆதாயம் ஏற்படும். இசை சார்ந்த பணிகளில் ஈடுபாடு ஏற்படும். கடன் பிரச்சனைகள் படிப்படியாக குறையும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சொத்து பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். திருப்தியான சூழல் அமையும். வெற்றி நிறைந்த நாள்.
கும்பம்
வஞ்சனை சிந்தனைகளை குறைப்பது நல்லது. சேமிப்பு அதிகரிக்கும். கோப உணர்வுகளை கட்டுப்படுத்தி கொள்வது நல்லது. புது இலக்குகள் பிறக்கும். நன்மையை உண்டாக்கும். வியாபார நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இன்னல்கள் விலகும் நாள்.
மீனம்
மாற்றங்கள் ஏற்படும். கவனம் வேண்டும். விட்டுக்கொடுத்து செல்லவும். ஆர்வம் உண்டாகும். சிந்தனைகளை குறைத்து கொள்வது நல்லது. எதிர்பாராத சில அலைச்சல்களால் ஒருவிதமான சோர்வு உண்டாகும். புதிய நபர்களால் நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்படும். லாபம் மேம்படும் நாள்.
ALSO READ | வியாழக்கிழமை விரதம் இருப்பது எப்படி? திருமணத் தடை நீங்குமா?