இன்றைய ராசிபலன் (22/3/2023):இந்த நாள் எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே காணலாம்.
மேஷம்
நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். முதலீடுகளில் கவனம் வேண்டும். பயணங்களின் மூலம் தெளிவு பிறக்கும். அயல்நாடு மீது ஆர்வமும், ஈடுபாடும் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில காரியங்கள் இழுபறியாக நிறைவுபெறும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புரிதல் நிறைந்த நாள்.
ரிஷபம்
புதிய வாய்ப்புகள் கிடைக்கும். லாபகரமான சூழ்நிலைகள் ஏற்படும். குழப்பம் குறையும். முன்னேற்றம் உண்டாகும். மனதளவில் உத்வேகத்தை ஏற்படுத்தும். மூத்த உடன்பிறப்புகள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி அமைதி ஏற்படும். இன்பம் நிறைந்த நாள்.
மிதுனம்
முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். அனுபவம் ஏற்படும்.. சொந்த ஊர் செல்வது தொடர்பான பயணங்கள் கைகூடும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். சேவை பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய ஆதரவு கிடைக்கும். வெளி உலக அனுபவத்தின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.
கடகம்
அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் உண்டாகும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் ஏற்படும். நேர்மைக்கு அங்கீகாரம் கிடைக்கும். உயர்கல்வியில் இருந்துவந்த குழப்பம் குறையும். தனித்திறமைகளை வளர்த்து கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். நலம் நிறைந்த நாள்.
சிம்மம்
சில அவப்பெயர்கள் ஏற்பட்டு நீங்கும். கோபமின்றி செயல்படவும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். பொறுமையுடன் செயல்படவும். வர்த்தக பணிகளில் முதலீடுகளை குறைத்து கொள்ளவும். செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை ஏற்படும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.
கன்னி
வாழ்க்கைத் துணைவரை பற்றிய புரிதல் மேம்படும். நிம்மதி ஏற்படும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கும். மதிப்பு அதிகரிக்கும். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். சகோதரர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். சுபகாரியம் சார்ந்த பேச்சுவார்த்தைகள் கைகூடும். வரவுகள் நிறைந்த நாள்.
துலாம்
நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். இன்னல்கள் குறையும். மந்தத்தன்மை குறைந்து சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வர்த்தகம் சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். மனதிற்கு நெருக்கமானவர்களின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். தன்னம்பிக்கை நிறைந்த நாள்.
விருச்சிகம்
குழப்பம் ஏற்பட்டு நீங்கும். குணநலன்களில் மாற்றங்கள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வழக்கு தொடர்பான விஷயங்களில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். பிள்ளைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சிக்கல்கள் குறையும் நாள்.
தனுசு
கருத்து வேறுபாடுகள் குறையும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ஆசிரியர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். உத்தியோக பணிகளில் இருப்பவர்களுக்கு அதிகாரங்கள் மேம்படும். விவசாய துறைகளில் மேன்மை ஏற்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். செல்வாக்கு மேம்படும் நாள்.
மகரம்
மறைமுக எதிர்ப்புகளை புரிந்து கொள்வீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் ஏற்படும். இடமாற்றம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். விற்பனை சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் ஏற்படும். மேன்மை நிறைந்த நாள்.
கும்பம்
சிந்தனைகள் அதிகரிக்கும். குடும்பத்தின் சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். முகத்தில் பொலிவுடன் காணப்படுவீர்கள். கணிதம் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். தடைகள் விலகும் நாள்.
மீனம்
மறைமுக நெருக்கடிகள் அவ்வப்போது தோன்றி மறையும். ரகசியங்கள் பகிர்வதை தவிர்க்கவும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். விட்டுக்கொடுத்து செல்லவும். வெளியூர் பணி நிமிர்த்தமான சிந்தனைகள் மேம்படும். எந்தவொரு செயலிலும் திருப்தியின்மை ஏற்படும். எதிலும் பகுத்தறிந்து செயல்படுவதன் மூலம் எண்ணங்கள் உண்டாகும். மதிப்பு மேம்படும் நாள்.
ALSO READ | எந்த ஓரையில் எதை செய்தால் என்ன பலன்..? இனிமே இப்படி பண்ணுங்க..!