இன்றைய ராசிபலன் (20/3/2023):
இன்றைய நாள் எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே காணலாம்.
மேஷம்
ஆதரவான வாய்ப்புகள் உண்டாகும். ஆர்வம் அதிகரிக்கும். ஒத்துழைப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தில் இன்னல்கள் குறையும். கலைத்துறையில் ஈடுபாடு உண்டாகும். சிந்தனைகளை மாற்றுவீர்கள். செயல்பாடுகளில் புத்திக்கூர்மை வெளிப்படும். விரயங்கள் நிறைந்த நாள்.
ரிஷபம்
மக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். ஆன்மிக தெளிவு பிறக்கும். சில மாற்றங்களின் மூலம் முன்னேற்றம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். திடீர் பயணங்கள் கைகூடும். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை உருவாக்கும். வெற்றி நிறைந்த நாள்.
மிதுனம்
செல்வாக்கு மேம்படும். முன்னேற்ற வாய்ப்புகள் கிடைக்கும். தன்னம்பிக்கை பிறக்கும். தனவரவில் தடைகள் குறையும். வேலையாட்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். வாக்குறுதிகளை அளிக்கும்போது சிந்தித்து செயல்படவும். இன்னல்கள் குறையும் நாள்.
கடகம்
அலைச்சலும், புதிய அனுபவமும் ஏற்படும். விட்டுக்கொடுத்து செல்லவும். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. சோர்வு ஏற்பட்டு நீங்கும். எதிர்காலம் தொடர்பான விஷயங்களில் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவீர்கள். வாகன பயணங்களில் நிதானத்துடன் செயல்படவும். சிக்கல்கள் உண்டாகும் நாள்.
சிம்மம்
அலைச்சல்கள் உண்டாகும். ஆன்மிக பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும். கருத்து வேறுபாடுகள் குறையும். சிந்தித்து செயல்படவும். மகிழ்ச்சியான தருணம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.
கன்னி
மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதுவிதமான அனுபவம் உண்டாகும். முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். நெருக்கடியான சூழல் ஏற்படும். உங்களின் பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். பொறுமையுடன் செயல்படவும். கவலைகள் விலகும் நாள்.
துலாம்
விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். தெளிவு நிறைந்த நாள்.
விருச்சிகம்
குழப்பம் நீங்கும். சிறு சிறு மாற்றங்களை செய்வீர்கள். உறவினர்களின் ஒத்துழைப்பு மேம்படும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். பயனற்ற செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். சுகம் நிறைந்த நாள்.
தனுசு
சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். இழுபறியான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். மகிழ்ச்சியான நாள்.
மகரம்
ஒத்துழைப்பு கிடைக்கும். உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். தனவரவிற்கான வாய்ப்புகள் ஏற்படும். சவாலான வாதங்களையும் சாதுரியமாக வெற்றி கொள்வீர்கள். செல்வாக்கு நிறைந்த நாள்.
கும்பம்
சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் ஏற்படும். மனதளவில் இருந்துவந்த இறுக்கம் குறையும். விவேகத்துடன் செயல்படவும். உடன்பிறந்தவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். அலைச்சல்கள் ஏற்படும். நேர்மறை சிந்தனையுடன் செயல்படவும். ஆதரவு நிறைந்த நாள்.
மீனம்
புரிதல் மேம்படும். பயணங்களால் மாற்றங்கள் ஏற்படும். பிரச்சனைகள் குறையும். கால்நடை தொடர்பான பணிகளில் கவனத்துடன் இருக்கவும். உத்தியோக பணிகளில் மற்றவர்களின் பணிகளையும் சேர்த்து பார்க்க வேண்டிய சூழல் அமையும். வாழ்க்கைத் துணைவரிடம் அனுசரித்து செல்லவும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
ALSO READ | பிரதோஷ வழிபாடு செய்வது எப்படி? பிரதோஷ விரதம் இருப்பதால் என்னென்ன பலன்கள்?