Wednesday, May 31, 2023
HomeAstrologyஇ‌ன்றைய ராசிபலன் (16/3/2023): மேஷத்துக்கு ஈடுபாடு.. ரிஷபத்துக்கு பொறுப்பு.. உங்களுக்கு எப்படி..?

இ‌ன்றைய ராசிபலன் (16/3/2023): மேஷத்துக்கு ஈடுபாடு.. ரிஷபத்துக்கு பொறுப்பு.. உங்களுக்கு எப்படி..?

இ‌ன்றைய ராசிபலன் (16/3/2023): இந்த நாள் எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே காணலாம்.

மேஷம்

ஆன்மீக ஈடுபாடு உண்டாகும். தடைபட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். லாபம் மேம்படும். குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். கவலைகள் குறையும் நாள்.

ரிஷபம்

பொறுப்புகள் அதிகரிக்கும். தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபார புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். மற்றவர்கள் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. மனதில் புது எண்ணங்கள் உண்டாகும். சமூக பணியில் இருப்பவர்களுக்கு புதுவிதமான சூழல் அமையும். விவேகம் வேண்டிய நாள்.

மிதுனம்

எதிர்பார்ப்பை நிறைவேற்றி கொள்கிறீர்கள். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். சேமிப்பது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மந்தத்தன்மை குறையும். திறமைக்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். தாமதம் உண்டாகும் நாள்.

கடகம்

ஆதாயம் உண்டாகும். உற்பத்தி தொடர்பான துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். இழுபறியான சூழ்நிலைகள் ஏற்படும். பிரீதி நிறைந்த நாள்.

சிம்மம்

புதுவித கண்ணோட்டம் உண்டாகும். ஆதரவாக இருப்பார்கள். புதுவிதமான திட்டங்களை செயல்படுத்துவதற்கான எண்ணங்கள் மேம்படும். வாய்ப்புகள் கிடைக்கும். கலைகள் மீதான ஆர்வம் உண்டாகும். சிந்தித்து செயல்படவும். ஆதரவு நிறைந்த நாள்.

கன்னி

ஆர்வம் மேம்படும். வியாபாரம் நிமிர்த்தமாக எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். நெருக்கடிகள் குறையும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பாசம் நிறைந்த நாள்.

துலாம்

பாராட்டுகள் கிடைக்கும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். சாதுரியமான சில செயல்களின் மூலம் தேவைகளை நிறைவேற்றி கொள்வீர்கள். சிந்தனைகள் மேம்படும். எழுத்து சார்ந்த துறைகளில் சிறு சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வெற்றி நிறைந்த நாள்.

விருச்சிகம்

அலைச்சலும், ஆதாயமும் ஏற்படும். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். பார்வை தொடர்பான இன்னல்கள் குறையும். செல்லப்பிராணிகளிடம் கவனம் வேண்டும். இடமாற்றம் சார்ந்த எண்ணங்கள் கைகூடும். லாபம் உண்டாகும். கவனம் வேண்டிய நாள்.

தனுசு

எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். குழந்தைகள் வழியில் அலைச்சல்கள் உண்டாகும். உயர்கல்வியில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். பணிகள் நிறைவு பெறுவதில் அலைச்சல்கள் உண்டாகும். இன்பம் நிறைந்த நாள்.

மகரம்

சில பயணங்களால் புதிய அனுபவம் உண்டாகும். மனதிற்கு பிடித்த உடைகளை வாங்கி மகிழ்வீர்கள். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மக்கள் தொடர்பு துறைகளில் இருப்பவர்கள் அனுசரித்து நடந்து கொள்ளவும். உயர்வு நிறைந்த நாள்.

கும்பம்

வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த இன்னல்கள் குறையும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். திறமைக்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். இணையம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் அமையும். ஊக்கம் நிறைந்த நாள்.

மீனம்

உடன்பிறந்தவர்கள் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மேம்படும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான சூழல் அமையும். சிறு தூர பயணங்களின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பயணங்கள் கைகூடும் நாள்.

ALSO READ | அறுபடை வீடு கொண்ட திருமுருகா.. சஷ்டி விரதம் இருப்பது எப்படி? என்ன பலன்கள்?