இன்றைய ராசிபலன் (14/04/2023):
தமிழ் புத்தாண்டான இன்று எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே காணலாம்.
மேஷம்
பேச்சுக்களில் மாற்றங்கள் உண்டாகும். இடமாற்றத்திற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். உங்கள் மீது நம்பிக்கை அதிகரிக்கும். வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் உண்டாகும். மருத்துவ பலன்கள் கிடைக்கும். தாய்வழி உறவினர்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். முயற்சிகள் ஈடேறும் நாள்.
ரிஷபம்
சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். குருமார்களின் ஆசீர்வாதம் மனதிற்கு தெளிவினை ஏற்படுத்தும். வியாபாரத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். தள்ளிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். இடமாற்ற முயற்சிகள் கைகூடும். உங்கள் மீதான வதந்திகளுக்கு தீர்வு கிடைக்கும். செல்வாக்கு நிறைந்த நாள்.
மிதுனம்
நெருக்கடிகள் ஏற்படும். ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து செயல்படவும். குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும். விலை உயர்ந்த பொருட்களில் பொழுது கவனம் வேண்டும். வாடிக்கையாளர்களிடம் சாதுரியமாக பேசுவதன் மூலம் உங்களின் மீது நன்மதிப்பு உண்டாகும். எதிர்பார்த்த சில உதவிகள் காலதாமதமாக கிடைக்கும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். கவனம் வேண்டிய நாள்.
கடகம்
கடினமான செயல்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். சகோதரர்களின் உதவிகள் கிடைக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பயணங்களால் அனுபவம் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மேம்படும். போட்டிகளில் பங்கு பெற்று பாராட்டுகளை பெறுவீர்கள். இழுபறியான சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். மேன்மை நிறைந்த நாள்.
சிம்மம்
விவாதங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் மாற்றங்களை செய்வீர்கள். உத்தியோக பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். மற்றவர்கள் கூறும் கருத்துக்களை பொறுமையுடன் கேட்டு முடிவெடுப்பது நல்லது. ஆடம்பர பொருட்களின் மீதான ஆர்வமும், அதனால் விரயமும் உண்டாகும். மகிழ்ச்சியான நாள்.
கன்னி
வருமானத்தை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். மனதில் புதுவிதமான சிந்தனையும், தன்னம்பிக்கையும் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.
துலாம்
எதிர்பார்த்த லாபமான சூழ்நிலைகள் ஏற்படும். தாயாருடன் அனுசரித்து செல்லவும். புதிய வேலை முயற்சிகள் ஈடேறும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். புதிய வீடு மற்றும் கால்நடை சார்ந்த செயல்பாடுகளில் ஆதாயம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். உயர்வு நிறைந்த நாள்.
விருச்சிகம்
உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். விளையாட்டு விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை மாற்றியமைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். லாபகரமான நாள்.
தனுசு
வியாபார சூழ்நிலைகள் மறையும். உங்கள் கருத்துக்களுக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். மனதில் நேர்மறை சிந்தனைகள் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோக பணிகளில் மாற்றங்கள் ஏற்படும். செலவு நிறைந்த நாள்.
மகரம்
விளையாட்டான பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். குடும்ப உறுப்பினர்களை பற்றிய புரிதல் உண்டாகும். செயல்பாடுகளில் கவனம் வேண்டும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்லவும். பணி ரகசியங்கள் பகிர்வதை தவிர்க்கவும். முன்கோபத்தை குறைத்து கொள்ளவும். நண்பர்களின் வருகையால் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்
கும்பம்
வியாபாரத்தில் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். ஆடம்பரமான செலவுகளை தவிர்க்கவும். மறைமுகமாக சில இன்னல்கள் ஏற்பட்டு நீங்கும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். தாமதம் குறையும் நாள்.
மீனம்
நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு மேம்படும். புதிய அனுபவம் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். சுபகாரியம் சார்ந்த எண்ணங்கள் ஈடேறும். வியாபாரத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். நிர்வாக திறமைகள் வெளிப்படும். உழைப்புகள் நிறைந்த நாள்.
ALSO READ | வீட்டில் பணம் கொட்ட வேண்டுமா..? அப்போ கண்ணாடியை இந்த இடங்களிலெல்லாம் மாட்டுங்க..!