Sunday, May 28, 2023
HomeAstrologyஇ‌ன்றைய ராசிபலன் (13/3/2023): இன்று திங்கள்..! எந்த ராசிக்காரர்களுக்கு எல்லாம் இனிய தொடக்கம்..? ஜோதிடம்...

இ‌ன்றைய ராசிபலன் (13/3/2023): இன்று திங்கள்..! எந்த ராசிக்காரர்களுக்கு எல்லாம் இனிய தொடக்கம்..? ஜோதிடம் சொல்வது என்ன?

வேலை நாளின் முதல்நாளான திங்கட்கிழமை இன்று எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலனகள் என்பதை கீழே காணலாம்.

மேஷம்

சிறு சிறு மன வருத்தங்கள் நேரிடும். அனுசரித்து நடந்து கொள்ளவும். விட்டுக்கொடுத்து செல்லவும். அலைச்சல்கள் உண்டாகும். பயணங்களில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும்.

ரிஷபம்

மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். போட்டி, பொறாமைகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் இன்னல்கள் நீங்கும். சிந்தனைகளில் மாற்றம் உண்டாகும். புதிய ஒப்பந்தம் சாதகமாகும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும்.

மிதுனம்

வியாபாரத்தில் முதலீடுகள் மேம்படும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் மீண்டும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் அனுசரிக்கவும். புதிய அனுபவம் கிடைக்கும்.

கடகம்

புதிய தெளிவு பிறக்கும். விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கில் ஆர்வம் அதிகரிக்கும். கணவன், மனைவி நெருக்கம் அதிகரிக்கும். சிந்தனைகள் மேம்படும். மாற்றம் அமையும். மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.

சிம்மம்

புதிய முயற்சிகளில் சிந்திக்கவும். ர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படும். வெளியூர் செல்வதில் மாற்றங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

கன்னி

கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சேமிப்பு குறையும். முயற்சிக்கு பலன்கள் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் ஏற்படும். கல்வி தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும்.

துலாம்

புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். ஆரோக்கியம் மேம்படும். மனை மூலம் ஆதாயம் உண்டாகும். கல்வியில் மேன்மை ஏற்படும் புதிய நம்பிக்கை ஏற்படும். ஆதரவு கிடைக்கும்.

விருச்சிகம்

சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடக்கவும். ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்வதை குறைத்து கொள்வது நல்லது. சில மாற்றங்கள் ஏற்படும். புதிய ஆர்வம் அதிகரிக்கும். மனதில் புத்துணர்ச்சி உண்டாகும்.

தனுசு

உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உங்கள் மீதான நம்பிக்கை மேம்படுத்தும். இடமாற்ற முயற்சிகள் கைகூடும். தனவரவில் இழுபறியான சூழ்நிலைகள் ஏற்படும். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

மகரம்

புத்துணர்ச்சி பெறுவீர்கள். அபிவிருத்திக்கான முயற்சிகள் கைகூடும். தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். அலைச்சல்கள் உண்டாகும். கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும்.

கும்பம்

சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். சிக்கல்கள் குறையும். வியாபாரத்தில் லாபம் மேம்படும். கடன் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். புதிய அனுபவம் உண்டாகும். பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை படிப்படியாக குறையும்.

மீனம்

அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். தெளிவான முடிவு எடுப்பீர்கள். முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் நிதானத்துடன் செயல்பட்டால் சாதகமான வாய்ப்புகளை உருவாக்கி கொள்வீர்கள்.