இன்றைய ராசிபலன் (11/3/2023): இந்த நாள் எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.
மேஷம்
புதுவிதமான ஆடைகளை அணிந்து மனம் மகிழ்வீர்கள். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றமும், பழக்கவழக்கங்களில் புதுமையும் உண்டாகும். கூட்டாளிகளை பற்றிய புரிதல் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும்.
ரிஷபம்
குழந்தைகளுக்கு கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். உத்தியோக பணிகளில் சிலருக்கு இடமாற்றம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் புத்துணர்ச்சி உண்டாகும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும்.
மிதுனம்
தனவரவுகளில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். கடன் நிமிர்த்தமான சில இன்னல்கள் குறையும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படுவீர்கள். வழக்கு சார்ந்த பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும்.
கடகம்
உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். கல்வி பணிகளில் மேன்மை உண்டாகும். தாய்மாமன் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.
சிம்மம்
வியாபார ரீதியான பணிகளில் வாடிக்கையாளர்களின் ஆதரவு மேம்படும். புதிய உணவுகளில் கவனம் வேண்டும். வெளியூர் பயணங்களால் புதிய அனுபவம் உண்டாகும். இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களை பற்றிய புரிதல் மேம்படும்.
கன்னி
விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும்.
துலாம்
புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் மேம்படும். எதிலும் தற்பெருமையின்றி செயல்படவும். நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். கன பயணங்களில் விவேகம் அவசியம்.
விருச்சிகம்
சக ஊழியர்களை அனுசரித்து செல்வதன் மூலம் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கையும், எதிர்பாராத அலைச்சல்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். எதிர்பாராத சிலரின் சந்திப்புகளின் மூலம் மாற்றங்கள் ஏற்படும்.
தனுசு
கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் உற்சாகமாக செயல்படுவீர்கள். குழந்தைகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். சமூக பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும்.
மகரம்
வியாபாரம் நிமிர்த்தமான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். கால்நடை தொடர்பான பணிகளில் ஆதாயம் ஏற்படும். சுயதொழிலில் லாபம் மேம்படும். நெருக்கமானவர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை நீங்கும். விவசாய பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் ஏற்படும்.
கும்பம்
எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். சக ஊழியர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். வாக்குறுதிகள் அளிப்பதை தவிர்க்கவும். நண்பர்களின் மூலம் அலைச்சல்களும், புதிய அனுபவங்களும் உண்டாகும்.
மீனம்
சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும். முக்கிய பிரமுகர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். உடன்பிறந்தவர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். மருத்துவம் தொடர்பான விஷயங்களில் ஆலோசனைகளை பெற்று முடிவு எடுக்கவும்.