ஒவ்வொரு மாதத்தில் பிறந்தவர்களுக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கும். அவ்வாறு தமிழ் மாதங்களில் எந்த மாதத்தில் பிறந்தவருக்கு என்னென்ன பண்புகள் இருக்கும் என்பதையும், எந்த மாதத்தில் பிறந்தவர் எந்த மாதத்தில் பிறந்தவரை மணம் முடிக்கலாம் என்பதையும் கீழே காணலாம்.
சித்திரை
சித்திரை மாதத்தில் பிறந்தவர்கள் காரியம் சாதிப்பதில் வல்லவர்கள். லட்சியத்தை மனதில் கொண்டு அதை நிறைவேற்ற வேண்டும் என்பதில் முழு மூச்சுடன் ஈடுபடுவார்கள். இவர்கள் ஆவணி மற்றும் மார்கழி மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்து கொள்வது நல்லது.
வைகாசி
வைகாசியில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் பல அனுபவங்களை பெறுவார்கள். இவர்கள் புரட்டாசி மற்றும் தை மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்து கொள்வது நல்லது ஆகும்.
ஆனி
ஆனி மாதத்தில் பிறந்தவர்கள் மிகுந்த புத்திசாலிகள். இவர்களிடம் மற்றவர்களை அடக்கி ஆளும் சக்தி உண்டு. இவர்கள் ஐப்பசி மற்றும் மாசி மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்து கொள்வது நல்லது.
ஆடி
ஆடி மாதத்தில் பிறந்தவர்கள் கற்பனை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருப்பார்கள். எதிர்காலத்தை திட்டமிடுவதில் இவர்களை மிஞ்ச யாராலும் முடியாது. இவர்கள் கார்த்திகை மற்றும் பங்குனி மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்து கொள்வது நல்லது.
ஆவணி
ஆவணியில் பிறந்தவர்கள் பெருந்தன்மையான குணம் கொண்டு, புகழோடு வாழ காரியங்களை சாதிப்பவர்களாக இருப்பார்கள். இவர்கள் மார்கழி மற்றும் சித்திரை மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்து கொள்வது நல்லது.
புரட்டாசி
புரட்டாசி மாதம் பிறந்தவர்கள் பெரும் செல்வத்துடன் வாழ பிறந்தவர்கள். இவர்கள் முதல்போடாமலே சம்பாதிக்கும் வலிமை படைத்தவர்கள். இவர்கள் தை மற்றும் வைகாசி மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்து கொள்வது நல்லது.
ஐப்பசி
ஐப்பசி மாதத்தில் பிறந்த ஆண்களும், பெண்களும் எந்த காரியத்திலும் வல்லவர்கள். சித்திரை, வைகாசி மற்றும் ஆனி மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்து கொள்வது நல்லது.
கார்த்திகை
இவர்கள் குழந்தையைப் போல மற்றவர்களிடம் பழகுவார்கள். இந்த மாதத்தில் பிறந்த பெண்களை திருமணம் செய்துகொள்ளும் ஆண்களுக்கு சகல பாக்கியங்களும் உண்டாகும். இவர்கள் சித்திரை, வைகாசி, ஆடி மற்றும் பங்குனி மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்து கொள்வது நல்லது.
மார்கழி
மார்கழியில் பிறந்தவர்கள் எந்த விஷயத்திலும் தனித்தன்மையுடன் இருக்க வேண்டும் என விரும்புபவர்கள். இவர்கள் சித்திரை, ஆனி, ஆவணி, பங்குனி மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்து கொள்வது நல்லது.
தை
தை மாதத்தில் பிறந்தவர்கள் வேலையில் கெட்டிக்காரர்கள். இவர்கள் வைகாசி, ஆடி, புரட்டாசி மற்றும் ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்து கொள்வது நல்லது.
மாசி
மாசி மாதத்தில் பிறந்தவர்கள் யாராவது பொய் பேசினால் அதை அறிந்துகொள்ளும் வல்லமை உடையவர்கள். இவர்கள் ஆனி, ஆவணி, ஐப்பசி, தை, மாசி மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்து கொள்வது நல்லது.
பங்குனி
பங்குனி மாதத்தில் பிறந்தவர்கள் தெய்வத்தின் மீது பாரத்தைப் போட்டுவிட்டு உழைப்பை மறந்துவிடும் குணமுண்டு. இவர்கள் ஆடி, புரட்டாசி, கார்த்திகை, மார்கழி மற்றும் பங்குனி மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்து கொள்வது நல்லது.
இதில் சிலருக்கு அவர்களின் ஜாதகம் மற்றும் தோஷங்கள் பொறுத்து மாறும்.