திருமணம் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அவர்கள் வாழ்விற்கு ஒரு முழு அர்த்தத்தை தருவது ஆகும். அப்பேற்பட்ட திருமணம் என்பது கைகூடுவதற்கு கடவுளின் அருள் வேண்டும். பலரும் வரன்கள் தேடி திருமணம் ஆகாமல் தவிப்பதை நாமே பார்த்திருப்போம்.
திருமணம் கூடி வருவதற்கு நமது ஜாதக பலன்களும் கூடி வர வேண்டும் என்பதே உண்மை.
ஜோதிட சாஸ்திரம் என்பது விஞ்ஞானமும், மெய் ஞானமும் கலந்த ஓர் கலவையாகும். ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும், ஜாதக கட்டத்தில் உள்ள கிரக அமைப்புகள் தான் அவர்களின் வாழ்வாதாரத்தை தீர்மானிக்கின்றது.
திருமண அமைப்பு, தோஷம், யோகப் பொருத்தம் :
- திருமண அமைப்பில் ஜாதகம் மிக முக்கியமானதாகும். இதில் 2,4,5,7,8 ஆகிய வீடுகளில் இருந்துதான் கல்யாண யோகமும், தோஷமும் அறியப்படுகிறது.
- செவ்வாய், ராகு கேது, மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம் போன்றவைகள் ஜாதக தோஷங்கள் ஆகும். இந்த தோஷங்கள் ஜாதகத்தில் நட்சத்திரங்களின் அமைப்புகளை பொறுத்து அமையும்.
கோச்சார கிரக அமைப்பு :
கோச்சாரம் என்றால் தற்காலத்தில் ஏற்படும் கிரக மாறுதல்களை குறிப்பதாகும். அதாவது சனிப் பெயர்ச்சி, குருப் பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி போன்றவையாகும். குருபலன் இல்லாதபோதும் திருமணம் கூடி வரும். ஏனென்றால் ஜாதக அமைப்பின்படி உள்ள தசாபுத்தி அந்தர யோக நேரமே நமக்கு சுப நிகழ்ச்சிகளை ஏற்படுத்தி தருகின்றன. ஆகையால், குருபலன் இல்லையே என்ற கவலை வேண்டாம்.
8ம் இடத்தில் கோச்சாரத்தில் குரு இருப்பதாலும், குருவின் பார்வை குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடத்தில் படுவதாலும் சுபகாரியங்கள் தங்கு தடையின்றி நடக்கும். ஜென்ம குருவாக இருப்பதாலும், குரு பார்வை களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்தில் படுவதாலும் திருமண யோகத்தை கொடுப்பார் குரு.