Monday, May 29, 2023
HomeAstrologyகுரு, சுக்கிரன், செவ்வாய் எந்த எண்ணில் இருந்தால் என்ன பலன்கள்..?

குரு, சுக்கிரன், செவ்வாய் எந்த எண்ணில் இருந்தால் என்ன பலன்கள்..?

நமது தமிழ் பஞ்சாங்கத்தில் குரு, சுக்கிரன், செவ்வாய், சனி மிகவும் முக்கியம் ஆகும். இவைகள் எந்த இடத்தில் இருக்கிறதோ, அதைப்பொறுத்து நமது வாழ்க்கையின் பலன்களும் மாறும். குரு, சுக்கிரன், சனி மற்றும் செவ்வாயின் பார்வை எந்த எண்ணில் இருக்கிறதோ அதற்கேற்றாற்போல வாழ்வில் ஏற்றங்களும், இறக்கங்களும் இருக்கும். அதனால்தான் குருபெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி போன்ற தினங்களில் ஆலயங்களில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

எந்த எண்ணில் என்ன இருந்தால் என்ன பலன்கள் என்பதை கீழே காணலாம்.

  • 3ம் எண்ணில் குரு இருந்தால் சுகபோகங்களை அனுபவித்து வாழக்கூடியவர்கள். எதிலும் தனித்தன்மை வாய்ந்தவர்களாக திகழ்வார்கள். இவை பொதுப்பலன்கள். தனிப்பட்ட ஜாதகத்தை பொறுத்து இவை மாறும்.
  • 11ம் எண்ணில் செவ்வாய் இருந்தால் நீங்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாகவும், தெளிவாகப் பேசக்கூடியவராக இருப்பவர்களாக இருப்பீர்கள். இதுவும் தனிப்பட்ட ஜாதகத்தை பொறுத்து மாறும்.
  • 10ம் எண்ணில் குரு இருந்தால் நீங்கள் வியாபார பணிகளில் மேன்மை அடைவீர்கள். பெருந்தன்மையான சிந்தனைகளை கொண்டவர்களாக இருப்பீர்கள்.

  • 6ம் எண்ணில் செவ்வாய் இருந்தால் அரசியலில் ஈடுபாடு உடையவர்களாகவும், சுறுசுறுப்பான செயல்பாடுகளை கொண்டவர்களாகவும் இருப்பீர்கள்.
  • 11ம் எண்ணில் சனி இருந்தால் எதற்கும் துணிந்தவர்களாகவும், வாகன வசதி கொண்டவர்களாகவும் திகழ்வார்கள்.
  • 4ம் எண்ணில் கேது இருந்தால் தனித்து செயல்படுவதில் ஆர்வம் கொண்டவர்களாகவும், தனிமையை அதிகம் விரும்பக்கூடியவர்களாகவும் திகழ்வார்கள்.
  • 12ம் எண்ணில் செவ்வாய் இருந்தால் மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றக்கூடியவர்களாகவும், சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லக்கூடியவர்களாகவும் இருப்பீர்கள்.
  • 2ம் எண்ணில் சுக்கிரன் இருந்தால் சுபிட்சமான வாழ்க்கை உடையவர்களாகவும், இனிமையான பேச்சுக்களை கொண்டவர்களாகவும் இருப்பீர்கள்.

மேற்கூறிய அனைத்தும் பொதுப்பலன்களே ஆகும். இது ஒவ்வொருவரின் தனிப்பட்ட ஜாதகத்தை பொறுத்து மாறும்.

ALSO READ | ‘சிவபூஜையில் கரடி பூந்த மாதிரி..’ உண்மையிலே இதுக்கு அர்த்தம் என்ன தெரியுமா..?