Monday, May 22, 2023
HomeAstrologyபெண்களின் வாழ்வில் குருபெயர்ச்சி என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? ஒவ்வொரு ராசிக்கும் எப்படி?

பெண்களின் வாழ்வில் குருபெயர்ச்சி என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? ஒவ்வொரு ராசிக்கும் எப்படி?

Guru Peyarchi 2023 Palangal: ஒருவரின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தையும், ஏற்றத்தையும் தரும் ஆற்றல் கொண்டது குருபெயர்ச்சி. குருபெயர்ச்சியின் பலன்கள் ஒரு மனிதனின் வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதை பலரும் சொல்லி நாம் கேட்டிருப்போம்.

இந்த வருட குருபெயர்ச்சி பெண்களின் வாழ்வில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த போகிறது என்பதை கீழே பார்க்கலாமா? எந்த ராசி பெண்களுக்கு எந்த மாதிரியான தாக்கம் ஏற்படபோகிறது? என்பதை கீழே பாருங்கள்.

மேஷம்

பெற்றோர்களை பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். உயர்கல்வியில் இருந்த குழப்பங்கள் குறையும். விருப்பமான சில விஷயங்கள் கைகூடும். திறமைக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும்.

ரிஷபம்

பெண்களுக்கு இறை வழிபாடு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கொடுக்கல், வாங்கலை முடிந்த அளவுக்கு தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத சில திடீர் திருப்பங்கள் ஏற்படலாம்.

மிதுனம்

பொருளாதாரத்தில் முன்னேற்றமான சூழ்நிலைகள் அமையும். வரவை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். வீடுகளில் மங்கல ஓசை கேட்கும்.

கடகம்

சுயதொழில் நிமிர்த்தமான முயற்சிகளில் குறைந்த அளவிலான முதலீடுகள் மேற்கொள்வது நல்லது. பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும்.

சிம்மம்

வாழ்க்கைத் துணைவர் பற்றிய புரிதல் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும்.

கன்னி

குடும்பத்தில் ஆதரவான சூழல் உண்டாகும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். பிடித்த உடைகள் மற்றும் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிலும் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. உடன்பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும்.

துலாம்

மனதில் எண்ணியவை நிறைவேறும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும். தனிப்பட்ட மற்றும் குடும்ப விஷயங்களை நண்பர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும்.

விருச்சிகம்

பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்வது நல்லது. விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும்.

தனுசு

குடும்பத்தில் புதிய நபர்களின் வருகை புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமையும், மகிழ்ச்சியும் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.

மகரம்

மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். செயல்களில் வேகத்தை விட விவேகம் வேண்டும். சில இடங்களில் உங்களை பற்றி தவறான விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும்.

கும்பம்

பெண்கள் தன்னம்பிக்கையுடன் எதிலும் செயல்பட வேண்டும். சகோதரர்களின் வழியில் அனுசரித்து செல்ல வேண்டிய சூழல் அடிக்கடி உண்டாகும். சுபகாரிய முயற்சிகள் கைகூடும்.

மீனம்

குழந்தைகள் மீதான கவலைகள் படிப்படியாக குறையும். திறமைக்கேற்ற புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அரசு சார்ந்த உதவிகள் சாதகமாகும். திருமணமானவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

மேலே கூறியவை அந்தந்த ராசிக்கு பொதுப்பலன்கள் ஆகும். பரிகாரங்கள் ஏதேனும் செய்ய வேண்டியிருந்தால் ஆலயத்திற்கு சென்று முறையாக செய்யுங்கள்.